(சித்தாண்டி நித்தி) மங்களம் நிறைந்த ஜய வருஷம் மார்கழி 01ம் நாள் 16.12.2014 செவ்வாக்கிழமை பகல் 12.00 மணிக்கு விஷேட சனி பகவானுக்கு விசேட பூசை நிகழ்வுகள் சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி பேராலயத்தில் நடைபெறவுள்ளது.
சனீஸ்வரர் இடமாற்றத்தினால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசியை உடையவர்கள் கண்டிப்பாக சனீஸ்வரர் ஹோமத்தில் கலந்துகொண்டு தோஷ நிவர்த்திகளை மேற்கொள்ளலாம்.
சனிஸ்வர பகவான் துலா ராசியில் இருந்து விருட்சிக ராசிக்கு இடமாற்றம் செய்வதால் ஏற்படும் பலன்கள்.
விருட்சிகம் : விசாகம் 4ம்கால் - அனுசம், கேட்டை (1ம் இடத்துச் சனி, ஜென்மச் சனி - மத்திமம்)
துலாம் : சித்திரை 3ம்,4ம்கால் - சுவாதி, விசாகம் 1.2.3ம் கால் (2ம் இடத்துச்; சனி, பாதச் சனி – மத்திமம்)
மேடம் : அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம்பாதம் (8ம் இடத்துச் சனி, அட்டமத்துச் சனி – மத்திமம்)
தனு : மூலம், பூராடம், உத்தராடம், 1ம்பாதம் (12ம் இடத்துச் சனி – விரயம்)
சிம்மம் : மகம், பூரம், உத்தரம், 1ம்பாதம் (4ம் இடத்துச்; சனி – மத்திமம்)
ரிஷபம் : கார்த்திகை 2ம்,3ம்,4ம் பாதங்கள், ரோகினி, மிருகசீடம் 1ம்,2ம் பாதங்கள்
(7ம்இடத்துச் சனி கண்டத்துச் சனி – மத்திமம்)
கன்னி : உத்தரம் 2ம்,3ம்பாதம் அத்தம் சித்தரை 1ம்,2ம்பாதம் (3ம் இடத்துச் சனி – நற்பலன்)
கடகம் : புணர்பூசம் 4ம்பாதம், பூசம் ஆயிலியம் ( 5ம் இடத்துச் சனி பஞ்சமமச்சனி – சமபலன்)
மிதுனம் : மிருகசீரிடம் 3ம்,4ம் பாதம் திருவாதிரை புண்பூசம் 1ம்,2ம்,3ம் பாதம் (6ம் இடத்துச் சனி – நன்மைகள்)
மீனம் : பூரட்டாதி 4ம் பாதம் உத்தரட்டாதி, ரேவதி ( 9ம் இடத்துச் சனி சமபலன்)
கும்பம் : அவிட்டம் 3ம்,4ம் சதயம், பூரட்டாதி 1ம்,2ம்,3ம் (10ம் இடத்துச் சனி – சமபலன்)
மகரம் : உத்தராடம் 2ம்,3ம்4ம் பாதம் திவோணம் அவிட்டம் 1ம்,2ம் பாதம். (11ம் இடத்துச் சனி – நன்மைகள்)
கிரக தோஷ நிவர்த்தி செய்ய தேவையான பொருட்கள்
கறுப்பு பட்டு, எள்ளுச் சட்டி, நீலக் காக்கணம் பூ, தேங்காய், நல்லெண்ணை, கற்பூரம், வேப்பம் பத்திரம்
ஆலயத்தில் நடைபெறவிருக்கும் கிரக தோஷ நிவர்த்தி பூசைகளில் அடியார்கள் கலந்துகொண்டு கிரக தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாமென சித்தாண்டி சித்திரவேலாயு சுவாமி பேராலயத்தின் சிவஸ்ரீ எம்.கே. குகன் குருக்கள் (ஈசான சிவாச்சார்ய திலகம், சோதிடர் வாஸ்து சாஸ்து நிபுணர், சகல ஆகம பூஷணம் -மந்திர, யந்திர, தாந்திரீக ஞனா) தெரிவிக்கின்றார்.













