ஹிரு­ணி­காவின் படங்­களை தொலைக்­காட்­சியில் காட்­சிப்­ப­டுத்த தடை

மேல் மாகாண சபை உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர தேசிய ரூப­வா­ஹினி தொலைக்­காட்­சியின் நுக­செ­வன நிகழ்ச்­சியில் வழங்கி வந்த, ஹிரு­ணி­கா­வுடன் சட்டம் என்ற விசேட அங்கம் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளது. 
 
அர­சாங்­கத்தின் உயர்­மட்­டத்தில் இருந்து தொலைக்­காட்­சியின் அதி­கா­ரி­க­ளுக்கு இந்த உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இதனை தவிர ஹிரு­ணிகா காணப்­படும் காணொ­ளி­க­ளையோ, புகைப்­ப­டங்­க­ளையோ தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்ப வேண்டாம் எனவும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. ஹிரு­ணிகா தொலைக்­காட்­சியில் வழங்கி வந்த இந்த நிகழ்ச்­சியில் நாடு முழு­வ­திலும் உள்ள மக்­களின் சட்டப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­பட்டு வந்­தது.
 
ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர அர­சாங்­கத்தில் இருந்து விலக தயா­ராக வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.