கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள இடைத்தங்கள் முகாம்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிவைப்பு

கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளம் மற்றும் மழை காரணமாக வீட்டை விட்டு இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களுக்கு உதவிப்பொருட்கள் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரனினால் வழங்கி வைக்கப்பட்டது. 

வெள்ளத்தினால் பாதிக்கப்;பட்ட மக்களின் இடைத்தங்கள் முகாம்களுக்கு நேரடியாக சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் உட்ப்பட நிவாரணக்குழுமத்தினர் மக்களுக்கு தேவையான வெற்சீட் மற்றும் தேவையான பாய் போன்ற பொருட்களை வழங்கிவைத்தனர். 

கோரகல்லிமடு இடைத்தங்கள் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கான உணவுப் பொருட்களை இராணுவ வீரர்கள் நேரடியாக நின்று உரிய நேரத்துக்கு சமைத்து வழங்கியிருந்தனர்.