இலங்கை வங்கி ஊழியர் சங்க தலைவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

1996ஆம் ஆண்டு முதல் வங்கி ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வ+தியத்தை ஊழியர் சங்க தலைவர் ஏ.கே.பண்டார அவர்களினது அயராத முயற்சியினாலும், போராட்டத்தினாலும் கடந்த 11ம் மாதம் முதல் வங்கி ஊழியர்களுக்கு மீளவும் கிடைக்கப்பெற்றதையிட்டு மக்கள் வங்கி மட்டக்களப்பு பிராந்திய ஊழியர்களால் இலங்கை வங்கி ஊழியர் சங்கத் தலைவருக்கான  வரவேற்பும் பாரட்டு நிகழ்வும் கல்லடி ஓசியானிக் கொட்டலில் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வங்கி ஊழியர் சங்க தலைவர் ஏ.சர்வேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஊழியர் சங்கத் தலைவரும், மக்கள் வங்கி உதவிப் பொது முகாமையாளருமாகிய ஏ.கே.பண்டார அவர்களும், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் ஏ.எம்.வலத்தூர், உதவி பிராந்திய முகாமையாளர் ஆர்.ரவீந்திரராஜா மற்றும் மக்கள் வங்கி கொக்கட்டிச்சோலை முகாமையாளர் மா.மோகனதாஸ்(இளங்கோ), மக்கள் வங்கி ஊழியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது ஏ.கே.பண்டார பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.