புனித மிக்கேல் கல்லூரி 72 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை - வீடியோ

(வரதன்)
ஜந்தாம் ஆண்டு புலமைப் பரிசில்ப் பரீடசையில் இம்முறை முதல் தடவையாக புனித மிக்கேல் கல்லூரியில் 72 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர் இவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி மாசிலாமணி தலைமையில் பாடசாலை சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது

மணிக்கூட்டுக்கோபுரத்தடியிலிருந்து மாலையணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அதிதிகளால் பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.இவ் நிகழ்விற்குப் பிரதம அதிதியாக மாநகர சபை ஆணையாளர் M. உதயகுமார்  கலந்துகொண்டார்.