(பொன்.டிமலேஸ்)
அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை விலை அடிப்படையில் வழங்கப்பட்டுவரும் மோட்டார் சைக்கிளை அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கத்தின் தலைவர் ஏ.புஹாது பொதுச்செயலாளர் க.நடராசா ஆகியோர் ஒப்பமிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின்கீழ் அரச உத்தியோகத்தர்களிடம் 50 ஆயிரம் ரூபாவைப்பெற்று சலுகை விலை அடிப்படையில் மோட்டார் சைக்கிளை வழங்குவதென கூறப்பட்டதோடு 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலும் முன்மொழியப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இதற்கமைய பல அரச உத்தியோகத்தர்கள் இச்சலுகையை பெற்றுள்ளமை கண்கூடு. இருப்பினும் அரச முகாமைத்துவ உதவியாளர்கள் இச்சலுகையை பெற முடியாமல் புறக்கநிக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். அரச இயந்திரத்தின் அச்சாணியாகவிருந்து செயற்படும் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையினைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு, தியாகம்இ வினைத்திறன் மிக்கதான சேவை என்பவற்றின்மூலம் மக்கள் மத்தியில் நன்மதிப்பையும், கௌரவத்தினையும் பெற்றுத்தரும் வகுதியினரான அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை சேர்ந்தோரை கண்ணியப்படுத்தவேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
எனவே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் எமது நியாயபூர்வமான கோரிக்கைக்கு நல்ல பதிலை அறிவிக்கவேண்டுமென அதில் கோரப்பட்டுள்ளது.