பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீர் வேகமாக ஓடுகின்றது

( ரவிப்ரியா )
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில். வெள்ளம் வடிந்தோடுவதற்கு, வசதியாக பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்பட்டு ஆறு, ஓடை மூலம் சேரும் வெள்ள நீர் சமுத்திரத்தை சென்றடைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
ஆற்றினூடாக வெளியில் இருந்து வரும் வெள்ள நீர் முதலில் உள்வாங்கப்படுதால், ஊர் வெள்ளங்கள் முழுமையாக வடிவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் எடுக்குமென அனுபவஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரியகல்லாறு உதயபுரம் பகுதியில் 49 குடும்பங்களும், மற்றைய பகுதியில் 11 குடும்பங்களுமாக சுமார் 70 குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளில் இடம் பெயர்ந்துள்ளனர். இதுவரை நிவாரண ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. தொடர்ந்தும் மழை பெய்துவருவதால் மேலும் குடும்பங்கள் பாதிப்பிற்குள்ளாகும்; ஏதுநிலை காணப்படுகின்றது.