மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞனர் பேரவையின் வேண்டுகோளில் பிரான்ஸ் நாட்டில் உள்ள புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி புரிவதற்காக இரண்டு லட்சம் ரூபா நிதி உதவியை வழங்கியது.
பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் பெறப்பட்ட உதவிகளைக் கொண்டு மாவட்டத்தில் பல இடங்களுக்கும் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம், சித்தாண்டி இராமகிருஸ்ணர் வித்தியாலயம், சித்தாண்டி நடராஜானந்தா கட்டிடம், சித்தாண்டி -2 பொதுக்கட்டட முகாம், சித்தாண்டி முருகன் கோயில் அன்னதான கட்டடம் உட்ப்பட பகுதிகளில் இருந்து 700 குடும்பங்களுக்கு கடந்த சனிக்கிழமை (27) படுக்கைக்கான பாய்கள் வழங்கப்பட்டது.
வெள்ளம் மற்றும் மழைநீரினால் பாதிக்கப்பட்ட பல பகுதி மக்களுக்கும் இவ் உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞனர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீனத்தம்பி யோகேஸ்வரன் தலைமையிலான குழு நேரடியாக சென்று பார்வையிட்டு வழங்கிவைக்கப்பட்டது.












