(பொன்.டிமலேஷ்)
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஒளிவிழா 2014 நிகழ்வு நேற்று(04) மட்/மமே/குறிஞ்சாமுனை அ.த.க.பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜேசு கிறிஸ்துவின் வருகையினை கொண்டாடும் நிகழ்வாக வருடந்தோறும் ஒளிவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வில் மாணவர்களின் நடனங்கள், கரோல் கீதங்கள், நாடகங்கள், நத்தார் தின செய்திகள் போன்ற பல நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
வலயக்கல்வி பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல், கெஸ்தமனே கொஸ்பெல் சேர்ச் பங்குத் தந்தை அருட்பணி பீ.வீ.மரியதாஸ் மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


























