சீலாமுனை யங்ஸ்டார் கழகத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்



நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினால் உருவாகியுள்ள வெள்ளப் பெருக்கினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக நாளாந்தம் உழைத்து வாழும் மக்கள் காணப்படுகின்றார்கள். கடந்த பல நாட்களாகத் தொழில் எதுவும் செய்ய முடியாத நிலையில் மிகவும் துன்பமான நிலையில் இம்மக்கள் வாழ்கின்றார்கள்.

இந்த வகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு சீலாமுனைக் கிராமத்தில் வாழும் நாளாந்தம் உழைத்து வாழும் குடும்பங்களின் நலன் கருதி சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினரால் இன்று (28.12.2014) உதவிகள் சேகரிக்கப்பட்டு அந்த உதவிகளைக் கொண்டு உலர் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை பொதி செய்யப்பட்டு நாளாந்த உழைப்பினை நம்பி வாழும் குடும்பத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

சீலாமுனை யங்ஸ்டார் விiளையாட்டுக் கழகத்தின் ஆதரவாளர்களும், நலன் விரும்பிகளும் இந்த நிவாரணப் பணிக்கு முழு மனதுடன் உதவிகள் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.