வர்த்தகப் பிரிவில் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த பால்சேனை கிராமத்தை சேர்ந்த மாணவன்

அண்மையில் வெளிவந்த க.பொ.த(உ.த) பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் வர்த்தகப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி 3பாடங்களிலும் "ஏ" தர சித்தியை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை ஜெயபால் கவேந்திராஜ் எனும் மாணவன் பெற்றுள்ளார்

குறித்த மாணவன் வாகரை, பால்சேனை எனும் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, சாதாரண தரம் வரை மட்/கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்று பின்  உயர் தரம் வர்த்தக பிரிவில் கல்குடா வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று இச்சாதனையை படைத்திருக்கின்றார்



வாகரை பிரதேசமானது யுத்தத்தாலும், சுனாமியாலும் மிகவும் பாதிக்கப்பட்ட இடமாகும். இவ்வாறான பிரதேசத்தில் இருக்கின்ற இம்மாணவர்கள் இச்சாதனைகளை படைத்து வருவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

இச்சாதனையை படைத்த இம்மாணவனை பால்சேனை மக்கள் மனதார வாழ்த்துகின்றனர்.