பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிப் பொருட்கள் வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுட்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் உள்ள மக்களுக்கு பிளான் லங்காவும், பிரதேச செயலகமும் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை கையளித்தனர்.

இதன் போது பிரதேச செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர், பிரதேச அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர், பிளான்லங்கா உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.