மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் மக்களுக்கெதிராக மதவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறர் ஏறாவூரில் ரணில் விக்கிரமசிங்க

(பேரின்பராஜா சபேஷ்) தமிழ் முஸ்லிம் சிங்கள பறங்கியர்களை அரசு பிளவுபடுத்தியுள்ளது மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் மக்களுக்கெதிராக மதவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறர் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஏறாவூர் புன்னக்குடா வீதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர்  தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக, எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,  ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ஏ.சி.கியாஸ்டீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

ஜனாதிபதி தேர்தல் அறிவித்தவுடன் முஸ்லிம் மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என அமீர்அலியிட்ம் கூறினோம். அந்த சந்தர்பத்தில் அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜநாம செய்து அமீர்அலி பாராளுமன்ற உறுப்பினரானார் எங்களது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயகவை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் அதனால் அமீர் அலியை எங்கள் பக்கம் வாருங்கள் என்று கூறினேன.

அமீர் அலி எங்கள் பக்கம் வந்தது இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பதற்காகவே. ஆவர் துரோகியா? அல்லது அவர்கள் பக்கம் இருப்வர்கள் துரோகியா?

கோவில்கள் தேவாலயங்கள் மசுதிகளை உடைத்தவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுன் உள்ளார்கள் போர்துக்கேயருக்கு எதிராக மாணதிஸ மன்னன் முஸ்லிம் மக்களை கிழக்கு மகாணத்தில் குடியமர்தனார். ஆந்த மன்னனை முஸ்லிம் மக்கள் நேசித்தார்கள். புலிப் பயங்கரவாதம் இருந்த போதும் முஸ்லிம் மக்கள் இங்கு இருந்தார்கள். முஸ்லிம் மக்கள் இருக்கவில்லை என்றால் யுத்தத்தை வெற்றிபெற்றிருக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷ முதல்முதலாக இனவாதத் தூண்டியே வந்துகொண்டிருந்தார். இனவாதத்தை தூண்டி வரமுடியாத நிலையில் மதவாதத்தைத் தூண்டிவருகிறன்றார். தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றார். இதை நாங்களும் எதிர்த்தோம் பௌத்த பெரியார்களும் எதிர்தார்கள். இன்று மஹிந்த ராஜபக்ஷ முடங்கிக் கிடக்கின்றார்.

இந்தநாட்டில் நாம் இலங்கையர் என்ற உரித்துரிமையயையும்  ஜனநாயகத்தையும் காதுகாக்கவேண்டும். எங்களுடன் ஐக்கிய தேசிய கட்சி, சந்திரிகா சுதந்திர கட்சி ஜாதிக ஹெல உறுமய சரத் பொன்சேன தமிழர் முஸ்லிம்கள் எல்லோரும் இருக்கிறார்கள். 

விரும்பியவர்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்ற நாம் உரிமைகளை வழங்குவோம். பன்சல, கோயில், பள்ளிவாசல்கள், தேவாலயங்களை நாம் பாதுகாப்போம், மத ஸ்தலங்களை சேதப்படுத்தியவர்களுக்கெதிராக நாம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்படும்.

மொழி உரிமை, மத உரிமை. மனித உரிமை கலாசார என்பன பாதுகாக்கப்படும். இலங்கைர்கள் எவரும் இரண்டாந்தரப் பிரஜைகளாக முடியாது. தமிழர் முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் அனைவரும் இலங்கையர்கள் எல்லோரையும் ஒரே நீதியால் பாதுகாப்போம்.

நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் அப்போதுதான் இலங்கையர் என்ற தன்மையும் ஜனநாயகமும் பாதுகாக்கப்படும்.