(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழக நிருவாக கட்டமைப்புக்கள் அமைந்துள்ள இடங்களிலேயே CCTV கமரா பொருத்தப்பட்டுள்ளதே தவிர மாணவர்களின் உரிமைகளை பகிர்ந்துகொள்ளும் இடங்களில் இல்லையென பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஒளி விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இக்கருத்தை தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில், நாங்கள் எந்தவொரு தனிநபர் இடங்களிலோ சரி மாணவர்களின் கற்றல் நடவடிக்கை இடங்களிலோ சரி CCTV கமரா பொருத்தவில்லை. பல்கலைக்கழக நுளைவாயிலில் பொருத்தப்பட்டுள்ளது காரணம் களவுகளைத் தடுப்பதற்காகவும், நிருவாக கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ளது காரணம் நிருவாக வேலைகளை இலகுபடுத்திக் கொள்வதற்காக மாத்திரம் இச்செயற்பாட்டை மேற்கொண்டிருக்கின்றோம். அதனை விடுத்து CCTV கமரா தொடர்பான விவகாரம் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையையும் கொண்டுவராது.
பொருத்தப்பட்டுள்ள CCTV கமரா காட்சிகளைப் பார்க்க உபவேந்தருக்கோ அல்லது பதிவாளருக்கோ தேவையும் இல்லை அதற்கான நேரமும் இல்லை. ஆனால் எப்போதாவது தேவையேற்ப்பட்டால் அதாவது துரதிஸ்டவசமாக விரும்பத்தகாத நிகழ்வு ஏற்ப்பட்டால் அது தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்காக மாத்திரம்தான் CCTV கமரா பாவிக்கப்படும். அதனைவிடுத்து CCTV கமரா காட்சிகளை பார்ப்பதற்குகூட எவருக்கும் நேரமில்லை.
CCTV கமரா தொடர்பான விடயம் உலகம் முழுவதும் பாவிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான விடயமாகும். அதனை விடுத்து CCTV கமரா பொருத்தப்பட்டுள்ளது தெடர்பாக மாணவர்கள் தேவையில்லாத செயற்பாடுகளில் ஈடுபடுவது பொருத்தப்பாடற்ற விடயமாகும்.
CCTV கமரா தொடர்பான விடயம் உலகம் முழுவதும் பாவிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான விடயமாகும். அதனை விடுத்து CCTV கமரா பொருத்தப்பட்டுள்ளது தெடர்பாக மாணவர்கள் தேவையில்லாத செயற்பாடுகளில் ஈடுபடுவது பொருத்தப்பாடற்ற விடயமாகும்.
CCTV கமரா பொருத்தப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு நியாயமான நன்மையிருக்கின்றது. கடந்த வருடத்தில் நான்கு மாணவர்கள் அத்துமீறி உள்நுளைந்து கதவுகளை உடைத்த சம்பவம் தொடர்பான பிரச்சினை,எனவும் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று புதன்கிழமை (17) பல்கலைக்கழக மாணவர் ஒருசிலரால் “பல்கலைக்கழகம் சிறைச்சாலை உருவாக்கத்திற்கான பாதயை நோக்கி” என்ற தலைப்புடன் துண்டு பிரசூரங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












