நானும் மட்டக்களப்பு, காத்தான்குடி மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனே இருப்போம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரவளிக்க தீர்மானித்து அதன் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது உத்தியோகபூர்வ தீர்மானத்தினை அறிவித்துள்ளது தொடர்பில் வினவியபோதே ஹிஸ்புல்லாஹ் 'கேசரி'க்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதாவது எனது கட்சி அமீர் அலிக்கு தேசிய பட்டியல் எம்.பி. பதவியொன்றினைப் பெற்றுக்கொள்ளும்வரை ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இவ்வாறு ஏமாற்றியுள்ளமை ஏற்கக்கூடியதல்ல.

யார்  அரசிலிருந்து விலகிப்போனாலும் முஸ்லிம்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக் ஷவே வெற்றிபெறப்போகிறார். எனவே வெற்றிபெறும் வேட்பாளரை ஆதரிப்பதே சமூகத்துக்கு நலனாக அமையும்.

முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிப்பதிலிருந்து விலகிச் சென்றாலும் ஜனாதிபதியே வெற்றிபெறுவார். ஏனென்றால் சிங்கள சமூகம், முஸ்லிம் காங்கிரஸ_ம், மக்கள் காங்கிரஸ_ம் தமக்கு தனியான அதிகார பகிர்வு கோருகிறார்கள் என்று கருதி ஜனாதிபதியையே ஆதரிப்பார்கள். எதிர்கட்சியை ஆதரிக்கும் சிங்கள சமூகத்தின் மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். இது ஜனாதிபதியின் வெற்றிக்கு சாதகமாகவே அமையும்.

முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிக்காதுவிட்டால் அவர் வெற்றிபெற்றாலும் எமது சமூக பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் நாம் சிரமப்பட ண்டியேற்படும். எனவே முஸ்லிம் சமூகம் இத்தேர்தலில் தெளிவாக இருக்க வேண்டும். வெற்றிபெறும் வேட்பாளராக மஹிந்த ராஜபக் ஷவையே ஆதரிக்க வேண்டும்.

காத்தான்குடி மக்களும், மட்டக்களப்பு மக்களும் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஜனாதிபதியை ஆதரிப்பதற்கு என்னுடன் கைகோர்த்து இருக்கிறார்கள். எவர் விலகிச்சென்றாலும் இதில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்றார்.