கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

(டில்ஷான்.)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் தரைவழிப் பாதை தடைப்பட்டு பாதிக்கப்பட்ட நாசிவக்தீவு கிராம மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.


 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் நாசிவன்தீவு கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் நாசிவன்தீவு கிராம சேவகர் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
 கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் வேல்விஷன் நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டு அறுபத்தி மூன்று 363 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.