(அசுவத்தாமா)
கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி அதிஸ்ட இலாபச்சீட்டு விற்பனை மேற்கொள்ளப்பட்டது. விற்பனை செய்யப்பட்ட அதிஸ்ட இலாபச் சீட்டிலிருந்து 1ம்,2ம்,3ம் பரிசுக்கு சொந்தக்காரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19.12.2014 அன்று ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு.கணேசன் ரமேஸ் அவர்களின் தலைமையில் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் இச்சீட்டிழுப்பு வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோ.ப.வ வாகரை பிரதேசசபையின் செயலாளர் திரு.சிவலிங்கம் இந்திரகுமார் அவர்களும் கௌரவ அதிதியாக கோ.ப.வ, வாகரை பிரதேச செயலகத்தின் கணக்காளர் செல்வி.கே.தர்மினி அவர்களும் சிறப்பு அதிதிகளாக வாகரை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி அவர்களும் மக்கள் வங்கியின் வாகரைக் கிளை முகாமையாளர் திரு.பி.மனோகரராஜா அவர்களும் மற்றும்; வாகரை உலக தரிசன நிறுவனத்தின் முகாமையாளர் திரு.பொனி ஜஸ்டின் வின்சன்ட் அவர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மேற்படி அதிதிகளின் முன்னிலையில் 1ம், 2ம் , 3ம் பரிசுக்குரியவர்கள்; தெரிவு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் பொருளாளர் செல்வி.சத்தியரெட்ணம் கீதாஞ்சலி அவர்கள் அதிக அதிஸ்ட இலாபச்சீட்டு புத்தகங்களை விற்பனை செய்து சிறப்புப் பரிசைப் பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.













