மட்டக்களப்பில் தைப்பொங்கல் பண்டிகை

(சிவம் )

சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகையை மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை (15)  இந்துக்கள் புதுப்பொலிவோடு கொண்டாடினர்.

ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ எஸ். சங்கரலிங்கம் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற புஜையில் சிறுவர்கள் பெரியவர்கள் மற்றும் வயோதிபர்கள் புத்தாடையணிந்து ஆலயத்;திற்கு வருகை தந்து பூஜையில் கலந்து கொண்டு வேண்டுதலில் ஈடுபட்டனர்.

இதே வேளை கத்தோலிக்க் இளைஞர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல்; சிறப்புத் திருப்பலி புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்றது.
உதவிப் பங்குத் தந்தை ஜோன்ஸ்டன் விசன்ட் மற்றும் அருட்தந்தை அருளானந்தம் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

கூட்டுத்திருப்பலியில் பங்கு கொண்டோருக்கு சப்பிரசாதம் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டன.

அத்தோடு நகரில் உள்ள வியாபார தலங்கள் மற்றும் வீடுகளின் முத்தத்தில் கோலமிட்டு மங்கலப்பொருட்களால் அலங்கரித்து பொங்கலிட்டு கொண்டாடினர்.