மட்டக்களப்பில் களை கட்டும் தைப்பொங்கல் வியாபாரம்

(சிவம் )  மக்கள் நாளைய தைப்பொங்கலை வரவேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 தைபிறந்தால் வழிபிறக்கும் என்பதை முன்னிலைப்படுத்தி மட்டக்களப்பு மாநகர பொதுச் சந்தையில் புதிய பானை, சட்டி, அகப்பை, கரும்பு  மற்றும் பழங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
 மட்டக்களப்பு நகரில் உள்ள உடுப்புக் கடைகளில் அதிகளவான மக்கள் புத்தாடைகளையும் மற்றும் மங்கலப் பொருட்களையும் வாங்குவதைக் காணமுடிந்தது.