சுவிஸில் வாழ் கிழக்கு மக்களின் " ஊரும் உறவும் பொங்கல் விழா"

(Battinews Swiss & எம்.ஏ.றமீஸ்)
புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளட ஊரும் உறவும் பொங்கல் விழா எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரில் இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவின்போது சுவிஸ் நாட்டில் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.


இதன்போது பல்வேறான தமிழர்களின் பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டி, பாரம்பரியமிக்க கலை கலாசார விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வின்போது பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும் சுவாமிக்கும் படைத்ததன் பின்னர் பரிமாறப்படவுள்ளன. இதன்போது ரஞ்சனின் இளையராகம் இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.