மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை சிறப்புத் திருப்பலி

(சிவம் )

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் தைப்பொங்கல் பண்டிகை சிறப்புத் திருப்பலி நேற்று (15) இடம்பெற்றது.

புளியந்தீவு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த சிறப்புத் திருப்பியை பேராலயத்தின் உதவி பங்குத் தந்தை ஜெரிஸ்டன் வின்சன், அருட்தந்தை எஸ். அருளானந்தம் ஆகியோர் ஒப்புக் கொடுத்தனர்.

தமிழ் பண்பாட்டு கூட்டுத்திருப்பலியின் பின்பு சப்பிரசாதம் வழங்கலோடு பேராலயத்தில் முன்வாயிலில் வாழை மற்றும் கரும்புகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில் பொங்கப்பட்ட பொங்கலும்  கலந்து கொண்டவர்களுக்குப் பகிரப்பட்டது.

இத்தகைய தமிழ் பண்பாட்டு கூட்டுத்திருப்பலி தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்திலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.