(வரதன் )
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டன .
கல்குடா தொகுதியில் 115 நிலையங்களும்
மட்டக்களப்பு தொகுதியில் 199 நிலையங்களும் மற்றும்
பட்டிருப்பு தொகுதியில் 100 நிலையங்களுமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
11265பேர் தேர்தல் பணிக்காக உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 1100 பொலிஸார் வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 365,163 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதில், கல்குடா தொகுதியில் 105,055 வாக்காளர்களும்
மட்டக்களப்பு தொகுதியில் 172,497 வாக்காளர்களும் மற்றும்
பட்டிருப்பு தொகுதியில் 87,611 வாக்காளர்களும் அடங்குகின்றனர்.























