மட்டக்களப்பில் வரலாறு காணாத மழையும் வெள்ளப்பெருக்கும் - ஒரு நோக்கு

இ.பாக்­கி­ய­ராஜன்
'தை பிறந்தால் வழி­பி­றக்கும்' என்­பது பழ­மொழி பழமொழி பொய்த்தால் பழம்­சோறு சுடும். எனவே தை பிறந்து விட்­டது. (ஜன­வரி) வழியும் பிறந்து விட்­டது. மார்­க­ழியில் மழை பெய்து ஏற்­பட்ட வெள்­ளத்­தினால் அடை­பட்ட வழிகள் தையில் மழை ஓய்ந்­ததும் போக்­கு­வ­ரத்­துக்கு ஏற்­ற­தா­கின்­றன. இதுவே  இப்­ப­ழ­மொ­ழியின் உண்­மை­யான கருத்து.



என்­ன தான் மீன்கள் பாடி­யி­ருந்­தாலும் பாலும் தேனும் பாய்ந்­தோ­டி­யி­ருந்­தாலும் மட்­டக்­க­ளப்பு இயற்கை அனர்த்­தங்கள் செல்லும் பிர­தான வழியில் அமைந்து விட்­டது. ஆன கார­ணத்­தினால் வெள்ளம் சூறா­வளி, சுனாமி என்று இயற்­கையின் சீற்­றத்­துக்கு வரு­டா­வ­ருடம் (2013 தவிர) உற்­பட்டு வரு­கின்­றது. கிழக்கில் அம்­பாறை திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களை விட மட்­டக்­க­ளப்பு அதிகம் பாதிப்­புக்கு உட்­ப­டு­கின்­றது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் சரா­சரி மழை வீழ்ச்சி 1651 மில்லி மீற்றர் ஆக இருக்­கையில் இந்த வரு­டத்தில் 2507.8 மில்லி மீற்றர் மழை பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. நவம்பர் மாதத்தில் சாதா­ரண வெள்­ளமும் டிசம்­பரில் வர­லாறு காணாத அளவு வெள்­ளமும் ஏற்­பட்­டுள்­ளது. நவம்­பரில் 521.1 மில்லி மீற்றர் மழையும் டிசம்பரில் 1153.7 மில்லி மீற்றர் மழையும் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. மட்­டக்­க­ளப்பில் மட்டு.நகர் மயி­ரம்­பா­வெளி, பாசிக்­குடா, கட்­டு­மு­றிவு, உறு­காமம் , உன்­னிச்சை, தும்­பங்­கேணி, நவ­கிரி ஆகிய இடங்­களில் மழை வீழ்ச்சி பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன. எனினும் நகரில் பெய்யும் மழை வீழ்ச்­சியே அறி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் நகரை விட ஏனைய இடங்­க­ளி­லேயே மழை அதிகம் பெய்­துள்­ளது. இதனை கவ­னத்தில் கொண்டால் 2507.8 மில்லி மீற்­றரை விட அதிக மழை பெய்­தி­ருக்கும் என்­பது தெளிவு.

டிசம்­பரில் வெள்ளம் ஏற்­பட்ட தினங்­களில் உறு­காமம் 136.5, தும்­பங்­கேணி 139.5 கட்­டு­மு­றிவு 145.2 பாசிக்­குடா 103.5, 117.5 என மட்டு.நகரை விட அதிக மழை வீழ்ச்சி பெறப்­பட்­டுள்­ளது. இது எமது மேற்­படி கருத்­துக்கு சான்­றாகும்
நாட்­டி­லுள்ள 24 மாவட்­டங்­களில் 22 மாவட்­டங்கள் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­தா­கவும் அவற்றில் சுமார் 11 இலட்சம் பேர் பாதிப்­புக்­குள்­ளா­ன­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் வெளி­யிட்ட தக­வல்­களை மேற்கோள் காட்டி ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தன. இவர்­களில் 106788 பேர் இடம் பெயர்ந்­த­தா­கவும் அந்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஆனால் 164356 குடும்­பங்­க­ளையும் அவற்றில் 583180 பேரை சனத்­தொ­கை­யா­கவும் கொண்ட மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 137000 பேருக்கு மேல் பாதிக்­கப்­பட்­டனர். என்றும் சுமார் 12000குடும்­பங்­களைக் கொண்ட சுமார் 41000 பேர் இடம் பெயர்ந்­தனர் என்றும் மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ பிரிவு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 54213 குடும்­பங்­களைச் சேர்ந்த 134144 பேரின் வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மாவட்­டத்தில் உள்ள 348 கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­களில் 341 பிரி­வுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. 22 மாவட்­டங்­க­ளிலும் மட்டு. மாவட்­டமே பாதிப்பில் முன்­ன­ணி­யா­க­வுள்­ளது.இது மட்­டக்­க­ளப்பு மாவட்ட சரித்­தி­ரத்தில் இவ்­வ­ளவு மோச­மாக ஏற்­பட்ட முத­லா­வது பாதிப்­பாகும். இதற்கு மிக முக்­கி­ய­மான காரணம் டிசம்பர் மாதத்தில் அதி­க­மான மழை வீழ்ச்சி ஏற்­பட்­ட­மை­யாகும். அது­மட்­டு­மன்றி டிசம்பர் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை 10 நாட்­க­ளுக்கு இடை­வி­டாது பலத்த மழை பெய்­த­மையும் மற்­றொரு கார­ண­மாகும். இவ்­விதம் தொடர்ச்­சி­யாக 10 நாட்­க­ளுக்கு பலத்த மழை பெய்­ததும் இதுவே முதல் தட­வை­யாகும்.

மட்டு. மாவட்­டத்தில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டு­வ­தற்கு பல கார­ணங்கள் இருக்­கின்­றன. பதுளை, அம்­பாறை மற்றும் பொலன்­ன­றுவை மாவட்­டங்­களில் பெய்யும் மழை நீர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு வடிந்து செல்­கின்­றது. இந்த மாவட்­டங்­களில் உள்ள அண்டல் ஓயா, மாதுறு ஓயா மற்றும் நவ­கிரி குளங்­களில் இருந்து வெளி­யேறும் நீர்­இங்கு வெள்­ளப்­பெ­ருக்கை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அத்­துடன் மேற்­படி மூன்று மாவட்­டங்­க­ளிலும் இருந்து பள்­ளத்­தாக்­குகள் வழி­யா­கவும் மேல­திக நீர் மட்­டக்­க­ளப்பை சென்­ற­டை­கின்­றது. மகா­வலி கங்கை மாவட்­டத்தின் வாகரை எல்­லையில் அமைந்­துள்­ள­மையால் அதன் பெருக்­கெ­டுப்பு மட்­டக்­க­ளப்பை பாதிக்­கின்­றது.

மட்டு. மாவட்­டத்தில் மட்­டக்­க­ளப்பு வாவி வாழைச்­சேனை வாவி பனிச்­சங்­கேணி வாவி என்­பன தவிர 14 ஆறுகள் இருக்­கின்­றன. உன்­னிச்சை உறு­காமம் உட்­பட 9 பாரிய குளங்­களும் புழு­கு­நாவ, கடுக்­கா­முனை, கங்­கா­ணியார் அடைச்­சகல் என 12 நடுத்­தர குளங்­களும் சுமார் 300 கிராமக் குளங்­களும் அமைந்­துள்­ளன. இத்­தனை நீரேந்து நிலை­க­ளிலும் இருந்து பெருகி நீர் வெள்­ளப்­பெ­ருக்கை ஏற்­ப­டுத்­து­கின்­றன.
இவ்­வாறு பெருகும் நீர் 5 வழி­களில் வங்­காள விரி­கு­டாவைச் சென்­ற­டை­கின்­றது. அமிர்­த­கழி முகத்­து­வாரம், கல்­லாறு முகத்­து­வாரம், வாழைச்­சேனை முகத்­து­வாரம், வாகரை முகத்­து­வாரம், மகா­வலி கங்கை முகத்­து­வாரம்
வழி­களே அவை.
இவற்றில் மட்­டக்­க­ளப்பு வாவி பிர­தா­ன­மா­னது. இவ்­வா­வியின் ஆழமும் அக­லமும் இப்­போது குறைந்து விட்­டன. ஆக்­கி­ர­மிப்பு கார­ண­மா­கவும் குப்பை கொட்ட இட­மற்ற கார­ணத்­தி­னாலும் கழி­வுகள் வாவியில் வீசப்­ப­டு­கின்­றன. இதன் கார­ண­மாக வாவியின் கொள்­ள­ளவு குறைந்து வெள்ளம் ஏற்­ப­டு­கின்­றது. இந்த நட­வ­டிக்­கைகள் தடுக்­கப்­பட்டு வாவி மேலும் ஆழ­மாக்­கப்­பட வேண்டும்.
வீதிகள் யாவும் கொங்­கிறீட் வீதி­க­ளாக புன­ர­மைக்கப்படு­கின்­றன. வீடுகள் அமைந்­துள்ள நிலத்தை விட வீதிகள் உய­ர­மாக அமைக்­கப்­ப­டு­வ­துடன் வடி­கான்கள் அமைக்­கப்­ப­டு­வ­தில்லை. இவற்­றுக்கு மேலாக பொது மக்கள் சுற்­று­ம­தி­லையும் அமைத்து வரு­கின்­றனர். இவற்றின் கார­ண­மாக மழை நீர் வெளி­யேற வழி­யின்றி வெள்ளம் ஏற்­ப­டு­கின்­றது.

பெப்­ர­வரி மாதம் வரை நீடிக்கும். சில வரு­டங்­களில் மார்ச் மாதத்­திலும் வெள்ளம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. மழையும் வெள்­ளமும் ஏற்­பட்­டது. அசா­தா­ண­ர­மான நிலை என்று சமா­தானம் கூற முடி­யாது. இயற்­கையின் சீற்­ற­மாக இருப்­பினும் ஏமா­ளி­யாக வந்த பின் தவிக்­காமல் வருமுன் காக்க வேண்டும்.
ஏற்­பட்ட வெள்ளம் பல கோடி ரூபா செலவில் புன­ர­மைக்­கப்­பட்ட வீதி­க­ளையே சூழ்ந்து போக்­கு­வ­ரத்தை பல நாட்­க­ளுக்கு ஸ்தம்­பிக்கச் செய்து விட்­டது. மண்டூர் - வெல்­லா­வெளி வீதி மண்டூர் - கல்­முனை வீதி, பட்­டி­ருப்பு வெல்­லா­வெளி வீதி, மட்­டக்­க­ளப்பு - வலை­யி­றவு வீதி, மட்டு - திரு­மலை நெடுஞ்­சாலை, மட்டு. வாகரை - திரு­மலை நெடுஞ்­சாலை ஆகிய முக்­கி­ய­மான வீதி­களில் போக்­கு­வ­ரத்து தடைப்­பட்­டது. புகை­யி­ரத சேவை கூட 2 தட­வைகள் ஸ்தம்­பித்­தன. இந்த பாதை­களில் வெள்ளம் பாய்ந்த இடங்கள் அடை­யாளம் காணப்­பட்டு குழாய் பதித்தோ தாம் போதிகள் பாலங்­களை அமைத்தோ வீதி­களை உயர்த்­தியோ புன­ர­மைக்க வேண்டும். அசா­தா­ர­ண­மான நிலைக்கு அப்பால் இந்த பாதை­களில் வருடா வருடம் போக்­கு­வ­ரத்து தடைப்­ப­டு­வதை கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

நிவாரணம் என்பது சுற்று நிருபங்களுக்கு உட்பட்டது. யானைப் பசிக்கு சோளப் பொரிக்கு சமமானது. அரசாங்க ஊழியர்களுக்கு எந்த வகையிலும் பொருளாதாரப் பாதிப்பு இல்லை. மட்டக்களப்பில் 54 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட தொழிலுக்கு செல்ல முடியாத நிலை. மேட்டு நிலப்பயிர்கள் நாசமாகியுள்ளன. 3921 வீடுகள் முற்றாகவும் சுமார் 8 ஆயிரம் வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெரும் போக வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நட்டத்தில் இருந்து மீள்வது என்பது விவசாயிகளால் முடியாத காரியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரிருவாரம் சமைத்த உணவும் உலர் உணவும் ஏக்கருக்கு 2, 3 புல் விதை நெல்லும் கை கொடுக்குமா?

எனவே, இயற்கையின் சீற்றத்துக்கும் அசாதாரணமான நிலைக்கும் அப்பால் நீடித்து நிலைத்திருக்கும் அனர்த்த தடுப்பு அல்லது குறைப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் கைகோர்ப்பதே செய்யக் கூடியது.