மோட்டார் சைக்கிள் விபத்தில் கிராம சேவகர் படுகாயம்

 தம்பிலுவில் கனகர்நகர் பிரதான வீதியில் திங்கட்கிழமை (05) இரவு இடம்பெற்ற விபத்தில், கிராமசேவகரொருவர் படுகாயமடைந்த நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இவர், திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ் விபத்தில், திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் கிராம சேவகரான பூபாலபிள்ளை திருத்தங்கவேல் (46 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.