முதல்முறையாக கட்டுமுறிவுக்குளத்திலிருந்து மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு

(அசுவத்தாமா)
  •  2014 இல் வெளியான உயர்தரப் பரீட்சையில் 2A, 1C பெற்று கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 116ஆம் நிலையினையும் கோட்ட மட்டத்தில் 2ஆம் நிலையினையும் வில்வராசா ரவிச்சந்திரன் எனும் மாணவர் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி வாகரைப் பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
  •  
  •  கதிரவெளியிலிருந்து 19 கிலோமீற்றர் தொலைவில் ஆண்டான்குளத்திற்கு அருகிலுள்ள சிறிய> வறிய விவசாயக் கிராமமே கட்டுமுறிவுக்குளம். போக்குவரத்து வசதிகளோ தொடர்பாடல் வசதிகளோ இல்லாத அதிகஷ்ட பிரதேச பாடசாலையான மட்/கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலையிலேயே க.பொ.த. சாதாரணதரம் வரை கற்று முதன்முதலில் சித்திபெற்ற இவர் உயர்தரக்கல்வியை மட்/பால்சேனை அ.த.க. பாடசாலையில் பயின்று இரு பாடசாலைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.