ஐமசுமு பட்டிருப்பு தொகுதி இணைப்பாளர் மைத்திரிக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி தேர்தல் இணைப்பாளர் அமரசிங்கம் விநாயகமூர்த்தி எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரவளிக்கும் முகமாக எதிரணியில் இணைந்துகொண்டார்;.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி தேர்தல் இணைபப்hளரான அமரசிங்கம் விநாயகமூர்த்தி இன்று ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரசார இணைப்பாளர் கணபதிப்பிள்ளை மோகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து அவர் எதிரணியில் இணைந்துகொண்டார்;.


அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

“ கடந்த ஐந்து வருடங்களாக பட்டிருப்பு தொகுதியின் இணைப்பாளராக செயற்பட்டு வந்தேன். கடந்த மாகாணசபைத் தேர்தல் காலத்தில் எமது பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்ட எந்தவிதமான வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படத காரணத்தில் நான் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் தொகுதி பட்டிருப்புத் தொகுதி. இந்த இந்த தொகுதி மக்கள் கடந்த கால யுத்தத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்டடிருந்தனர் அந்த காலகட்டத்தில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் நிலவுகின்ற போதும் பெரியஅளவிலான அபிவிருத்திநடவடிக்கைள் மேற்கொள்ளப்படவில்லை. இதற்குப்பின்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி தேர்தல் இணைப்பாளராக இயங்குவதில் எவ்வித பயனுமில்லை என நினைக்கிறேன.

மக்கள் மாற்றம் ஒன்று தேவை என எதிர்பார்கிறார்கள் அந்த அடிப்படையில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளளேன்” என்றார்