ஈச்சிலம் பற்று பிரதேச ஐந்து வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் மந்த போசாக்கு தொடர்பான விழிப்புணர்வு

(Siththa)
திருகோணமலை  மாவட்ட   ஈச்சிலம்  பற்று  பிரதேச  சுகாதார  வைத்திய  பணிமனை ,  திருகோணமலை வேள்விசன் நிறுவன  அனுசரணையுடன்   ஈச்சிலம்  பற்று  பிரதேச  ஐந்து  வயதுக்கு  உட்பட்ட  பிள்ளைகளின் மந்த  போசாக்கு  தொடர்பான  விழிப்புணர்வும்,  இதை  குறைப்பதற்கான  ஒன்றிணைந்த  வலைபின்னல் செயற்பாட்டு  திட்டம்  தொடர்பான  கருந்தரங்கும்,  கலந்துரையாடலும்  ஈச்சிலம்  பற்று  பிரதேச  செயலகத்தில்  ஈச்சிலம்  பற்று  பிரதேச  சுகாதார  வைத்திய  அதிகாரி  மற்றும்  ஈச்சிலம்  பற்று  பிரதேச  உதவி  திட்டமிடல் பணிப்பபாளர்  தலைமையில்   நடைபெற்றது.  இதில்   ஈச்சிலம்  பற்று  பிரதேச  கிராம சேவை உத்தியோகஸ்தர்கள்,  சமுத்தி உத்தியோகஸ்தர்கள்,  பொருளாதார அபிவிருத்தி  உத்தியோகஸ்தர்கள், சுகாதார வைத்திய  குடும்ப  நல  உத்தியோகஸ்தர்கள்  மற்றும்  வேள்விசன்  நிறுவன  மாவட்ட  திட்ட  முகாமையாளர், மாகாண  சுகாதார  போசாக்கு  திட்ட  இணைப்பாளர்  மற்றும்  பிரதேச  திட்ட  இணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.




பிரதேச உதவி திட்டமிடல் பணிப்ப்ளர் உரையாற்றுவதையும்




கருத்தரங்கில் கலந்து கொண்டோரையும்



மாகாண சுகாதார போசாக்கு திட்ட இணைப்பாளர் விரிவுரை ஆற்றுவதையும்.



வேள்விசன் நிறுவன மாவட்ட திட்ட முகாமையாளர் கலந்துரையாடுவதையும்



மந்தபோசாக்கை குறைப்பதற்கான ஒன்றிணைந்த வலைபின்னல் செயற்பாட்டு திட்டம்