( ரவிப்ரியா )
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012, 2013, 2014 காலப்பகதியில் பட்டதாரி சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட இதுவரை வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ளாதவர்களை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை எதிர்வரும் 20.01.2014 செவ்வாயன்று நடைமுறைப்படுத்த இருப்பதாக சங்கத்தின் உபதலைவர் தெரிவித்தார்.
மாங்காடு சமுர்த்தி வங்கிக்கருகாமையில் உள்ள பல்தேவைக் கட்டடத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெற இருக்கும் அங்கத்தவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வில் இதுவரை தங்கள் பெயர்களைப் பதிவு செய்த கொள்ளாதவர்கள், தேசிய அடையாள அட்டை ,மற்றும் பட்டதாரி சான்றிதழ் பிரதி என்பவற்றுடன் வருகை தந்து 100 ருபா கட்டணம் செலுத்தி தங்கள் பெயர்களை பதிவ செய்துகொள்ளலாமென அவர் மேலும் தெரிவித்தார்.












