மைத்திரிக்கு வாக்களித்த எமது உறவுகளுக்கு நன்றிகள் - யோகேஸ்வரன் எம்.பி

(பேரின்பராஜா சபேஷ்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும்கட்சி சார்பான ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்தின் மத்தியிலும் தமிழ் தேசிய கூட்டமைபபின் வேணடுகோளினை ஏற்று ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என தமிழ தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரித்துள்ளார்
ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபாலவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவவாறு குறிப்பிட்டுள்ளார.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்ப்பட்டுள்ளதாவது

தமிழ் மக்களின நியாய பூரவமான கோரிககைகளுககு செவிசாய்க்காது அராஜக ஆட்சி நடாத்தி வந்த ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய ஆட்சியாளர் ஒருவரை ஆசனததில் அமர்த்தி தமிழ் மக்களது உரிமைகளை ஜனநாயக ரீதியில வென்றெடுப்பதறகான தமிழ் தேசிய கூடடமைப்பின் போராட்டத்திற்கு தமிழ மக்கள் மீண்டும் வழங்கியுள்ள அங்கீகாரமாகவே இந்த வாக்களிபபினைக் கருதுகனறோம்.

தமிழ் மக்களது பல தசாப்தகால உரிமைப் போராட்டத்தை கொச்சைபடுத்தும் பேரினவாதிகளின் ஒட்டுண்ணிகளை தமிழ் மக்கள் என்றும் துரோகிகளாகவே பார்க்கிறார்கள் என்பது இந்த தேர்தலின் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் வாக்குப் பலத்தினாலும் ஒற்றுமையினாலுமே இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவரை ஆட்யில அமர்த்த முடியும் என்ற உண்மை தற்போது உலகறியச் செய்யப்பட்டுள்ளது இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேணடும் என்பது எமது தாழ்மையான வேணடுகோளாகும்.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமாக எமது கோரிக்கைகளையும் அபிலாசைகளயும் வெற்றி கொள்ள முடியும் என்ற உணரவனை சிதறடிகக கூடாது.

நடந்து முடிந்துள்ள தேர்தலில் அளும் தரப்புக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களின அச்சுறுத்தல்கள் மேலோங்கியிருந்த போதிலும் தமிழ் மக்கள் சமூக உணர்வுடன் சுயமாக முன்வந்து வாக்களித்தது தமிழ் தேசிய உணரிவினையும் ஒற்றுமையையும் உலகுகறியச் செய்திருப்பது தமிழ தேசிய கூட்டமைப்பின் ஜனநாயக போராட்டத்துக்கு வலுசேர்த்துள்ளது.

மைத்திரியின் ஆட்சியில் காணமால் போன மற்றும் சிறையில்வாடும் எமது உறவுகளுக்கு ஒரு விடிவு ஏற்படும், இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் மக்களின் நியானமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என எதிர்பார்கிறோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.