
( ரவிப்ரியா )
கல்லாறு மக்கள் வங்கி கிளையில் 01.01.2015 வியாழக்கிழமை கிளை முகாமையாளர் திருமதி ம.மனோகரன் தலைமையில் புத்தாண்டு கொடுக்கல் வாங்கலை மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் ஏ.எம்.வலித்தூர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து புத்தாண்டு வைப்புக்களை மேற்கொண்டவர்களுக்கு, பரிசுகளை வழங்கி வைத்தார்.
அவருடன் இணைந்து கிளை முகாமையாளரும் பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கிளையின் பிரதி முகாமையாளர் கே.யோகநாதன், மற்றும் கிளையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.