பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பொங்கல் விசேட பூஜை

( ரவிப்ரியா )

   பொங்கல் பற்றிய பொதுமக்களின் நினைவலைகள்.

இம்முறை பொங்கல் பண்டிகை மிகவும் உற்சாகமாக, உழவர்களை வாழவைக்கும் உதயசூரியனுக்கு, நன்றி செலுத்தம் விழாவாக உதயத்தில் பால் பொங்க, புது அரிசி போட்டு பொங்கல் செய்து, வீட்டுக்கு வீடு படைக்கப்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
புதன் இரவு தொடக்கம் பொது மக்கள் பட்டாசு கொழுத்தி வாண வேடிக்கை செய்து தங்கள் மகிழ்ச்சியை முன்னெப்போதுமில்லாதவாறு வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதிகாலையில் பட்டாசுகள் அதிர்ந்த வண்ணமிருந்தது.

 இம்முறை பொதுமக்களிடம் ஒரு நல்ல நம்பிக்கைக் கீற்று உதயமாவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவர்களிடம் பொங்கல் பற்றி கேட்டபோது, சூரபத்மன் அழிக்கப்பட்டபோது தேவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியில் இருந்தார்களோ அதைவிட மகிழ்ச்சியில் நாம் இருப்பதால் இம்முறை பொங்கல் பண்டிகையை மனம் வைத்துக் கொண்டாடுவதாக அவர்கள் தெரிவித்தார்கள். ஏனெனில் மௌனமான வாக்குப் புரட்சியால் அக்கிரமக்காரர்களை அரசில் இருந்து விரட்டியுள்ளோம்.

புதிய அரசின் ஆரம்பமே நன்றாக அமைந்திருக்கின்றது. அத்தியாவசிய பொருட்கள் 10க்கான விலை குறைப்பிறற்கான நிச்சயத் தன்மை வயிற்றில் பாலை வார்த்துக் கொண்டிருக்கின்றது. அதனால் பால் இம்முi றநன்றாக பொங்கி வழிந்தது. ஊழலற்ற அரசுக்கான முன்முயற்சிகளும் நல்ல நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது. ஏல்லாவற்றிற்கும் மேலாக புனிதர் பாப்பரசரின் பாதங்கள் இப்பாவப்பட்ட மண்ணில் பதிந்ததால் இம் மண்ணும் புனிதமாகியுள்ளது. எனவே தமிழர் புத்தாண்டில் புதிய நம்பிக்கைகள் உருவாகியுள்ளதால் காம் உற்சாகமாக பண்டிகைபொங்கலும்யைக் கொண்டாடுகின்றோம் என தெரிவித்தனர்.

ஆலயங்களில் விசேட பூஜைகள்

 இம்முறையும் ஆலயங்களில் பொங்கல் விஷேட பூஜைகள,; வழக்கம்போல் சிறப்பாக நடைபெற்றது. பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கம்பிளியாகுடி அடப்பன் க.வரதன் தலைமையில் இ. சுவர்ணராஜ் சகிதம்  பிரதம குரு சிவஸ்ரீ மேகானந்தக் குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.