கிழக்கு பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைப்பு

(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலை கழகத்தில்  மாணவர்களுக்கு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை  புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழ் சங்கம், வெற்றி யுனி பண்ட் நிறுவனத்தினூடாக இப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.


மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்தும் தெரிவான மாணவர்கள் இப்புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொண்டதுடன் இரு பார்வையற்ற பட்டதாரி மாணவர்களும் பெற்றுக்கொண்டமை விஷேட அம்சமாகும்.

பெற்றி யுனி பண்ட் நிறுவன தலைவர் வைத்திய நிபுணர் கே.சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு ஸ்ரீ இராம கிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தாஜீ மகராஜ் மற்றும் உளவள நிபுணர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மருத்துவம், விஞ்ஞானம், கலை, கலாசாரம், வர்த்தக முனாமைத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல துறை சார்ந்த மாணவர்களுக்கு இப்புலைமைப்பரிசில் வழங்கப்பட்டன.

உயர்கல்வியைத் தொடர்வதற்கான பணத் தொகையைப் பெற்றுக்கொண்ட பிற்பாடு மாணவன் ஒருவான் கருத்துதெரிவிக்கையில்

நான் எனது தாய் தந்தையை இழந்த நிலையில் எனது கல்வியை பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருந்து கல்விகற்றுவந்தேன், நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் மூன்று 'ஏ' சித்தியைப் பெற்று பல்கலைக்கழத்தில் முகாமைத்துவப் பீடத்திற்கு தெரிவாகியுள்ளேன். பெரியம்மாவின் வீட்டில் கிடைக்கின்ற குறைந்த வருமானத்தைக் கொண்டு உயர்தரகல்வியை முடித்தபிற்பாடு பல்கலைக்கழக படிப்பிற்கு பண வசதிகள் போதுமானதாக இல்லாத காரணத்தினால் மிகவும் கவலையுடன் எவ்வாறு எனது உயர் பட்டப்படிப்பை முடிப்பது என கவலையாக இருந்த நிலையில் இவ்வாறான நிதி உதவிகளைச் செய்த வெற்றி யுனி பண்ட் நிறுவனத்தினருக்கும் அதன் கிளையாக இயங்கிக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, இவ்வாறான நிதி உதவி மூலமாக என்னுடைய உயர் பட்டப்படிப்பை மேற்கொள்ள பெரிதும் உந்துசக்தியாகவும் உறுதுணையாகவும் இருக்குமென்பதில் ஐயமில்லை. 

இவ்வாறான நிறுவனங்கள் என்னைப்போல் உயர்கல்வியைத் தொடர முடியாமல் இருக்கின்ற மாணவர்களுக்கு இவ் உதவிகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும். 

எனவே எதிர்வரும் காலங்களிலும் என்னைபோல் வறிய மாணவர்களை இனங்கண்டு இவ் உதவிகள் கிடைக்கப்பெறவேண்டும் அதன்மூலம் அவர்கள் உயர்கல்வியை சிறப்பானமுறையில் தொடரமுடியுமெனவும் குறிப்பிட்டார்.