வள்ளம் கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கிண்ணியா, கப்பல்துறை, கொட்டியாரகுடாவில் வள்ளம் கவிழ்ந்ததில் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் மேலும் ஐவர் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காக்காமுனை – இறங்குதுறையிலிருந்து இரண்டு சிறுவர்களும், ஆறு பெண்களும் அதிகாலை கலப்பிற்கு சென்றுள்ளனர்.


இதன்போது அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 12 வயது சிறுவனும், 2 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிர்தப்பிய ஐந்து பேரில் மூவர் கப்பல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.