கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி கிளையில் புதுவருட கொடுக்கல் வாங்கல் ஆசியுடன் ஆரம்பம்

(படுவான் பாலகன்) மக்கள் வங்கியின் பிறந்திருக்கின்ற புதுவருடத்திற்கான( 2015) கொடுக்கல் வாங்கல் ஆரம்ப நிகழ்வு இன்று(01) காலை மக்கள் வங்கி கிளையின் முகாமையாளர் திரு.மா.மோகனதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.வ.சோதிலிங்கம் குருக்கள் அவர்களின் ஆசியுடன், மக்கள் வங்கி ஊழியர்களின் சத்தியப்பிரமாணத்தினை தொடர்ந்து முதலாவது பண வைப்பினை கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் பொருளாளர் சபாரெத்தினம் அவர்கள் ஆலய வங்கிக்கணக்கில் வைப்புச் செய்து இவ்வருடத்திற்கான சேவையை ஆரம்பித்து வைத்தார்.


அதன் போது கருத்து தெரிவித்த பொருளாளர் இவ் வங்கியின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக மக்களுடன் இணைந்து சேவை செய்யவதாகவும் இதனால் வங்கிக்கிளை இன்று எல்லோராலும் பேசக்கூடிய வகையில் உயிர்பெற்று விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இதன் போது கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.