விஜேய் கொன்ஸ்ரக்ஷன் அன் கோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருக்கு கிழக்கு மாகாணத்தின் சிறந்த பாரிய முதலீட்டாளருக்கான விருது

இலங்கை வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனங்களின் ஒன்றிணையத்தினால் நடாத்தப்பட்ட 2014 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்டத்தில் சிறந்த பாரிய முதலீட்டாளர்களுக்கான தெரிவில் மட்டக்களப்பினை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் விஜேய் கொன்ஸ்ரக்ஷன் அன் கோ   நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான தேசகீர்த்தி,சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி கிழக்கு மாகாணத்தின் சிறந்த பாரிய முதலீட்டாளராக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

25.01.2015 அன்று குருணாகல் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விருது வழங்கல் வைபவத்தில் இவருக்கான விருது வழங்கிவைக்கப்பட்டது.




 நிர்மாணக் கைத்தொழில், வியாபாரம், விவசாயம் ஆகிய தொழில் துறைகளில் துணிச்சல்மிக்க முதலீடுகளை மேற்கொண்டு பிரதேச மக்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கி பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு சிறந்த முறையில் பங்களிப்பு செய்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர், 4வது தடவையாக இவ் விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 29 ஆந் திகதி நடைபெறவுள்ள தேசிய மட்டத்திலான போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 




2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற விருது வழங்கல் நிகழ்வில் நெஸ்லே பொருட்களுக்கான சிறந்த வினியோகத்தர் விருது

 

2004 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில்  துணிச்சல் மிக்க சிறந்த முதலீட்டாளர் விருது 




விஜேய் கொன்ஸ்ரக்ஷன் அன் கோ நிறுவனத்தின் தலைமையகம்