இன்று பல்வேறு பகுதிகளில் நிம்மதியைத் தேடித்திருரியும் பல்வேறு அவலக்குரல்கள். எங்கே நாம் நிம்மதி என்கின்ற பெரும் சொத்தைப்பெறலாம். வீட்டிலா? ரோட்டிலா? காட்டிலா? வெளிநாட்டிலா?.
நமக்குள்ளே நாம் நிம்மதியைப் பெறமுடியும் வேறு எங்குமில்லை.
வாசகருக்காக நான் மேலே பல்வேறு நிம்மதி கிடைக்குமா? என்கிற பல்வேறு வழிகளைச் சொல்லியிருக்கின்றேன். நான் கூறியிருக்கும் ஒவ்வொரு இடங்களிலும் ஓரிரு நாள் அல்லது கிழமை அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் தான் நிம்மதி என்ற பெரும்சொத்தை அடைய முடியும்.
நாம் தேட வேண்டியது, நிரந்தரமானதும் ஆரோக்கியமான நிம்மதியை மாத்திரம். அதைவிடுத்து நமக்காக நிம்மதி இருக்கக்கூடாது நிம்மதிக்காக நாம் இருக்கவேண்டும்.
“என்னுடைய வீடு ஓலைக்குடிசையென்றால் என்ன? இலுக்கு புல்லினால் மேய்ந்த கொட்டில் என்றால் என்ன? கல்லால் கட்டப்பட்ட கட்டடம் என்றால் என்ன? நிறுத்துங்கள் எனது வீட்டு சாமியறை மட்டும் ஆறுபோல் பாய்ந்துவரும் வெள்ளத்தை. யாரால் முடியும்? முடிந்தால் நிறுத்தி விடுங்கள் எங்கள் குடிமனைக்குள்ளே நாங்கள் சற்று நிம்மதியாக உறங்குகின்றோம் சற்று நேரம்”. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அடிப்படை வசதியற்ற மாணவர்கள் நிலத்தில் இருக்கமுடியாமல் கதிரை, மேசை போட்டு உட்காரும் பாடசாலைக்குள் தத்தளித்த மக்களின் அவலக்குரல்.
நாங்கள் போகும் வைத்தியசாலையில் ஒரு சிலரைப்பார்த்து வைத்தியர் சீனி வருத்தம் என்பார், இரத்தபோக்கு அதிகம் அல்லது குறைவு என்பார், கொலஸ்ரோல் என்பார், வாதம் என்பார், நீங்கள் அதைச் சாப்பிட வேண்டாம், இதைச் சாப்பிடுங்கள் அல்லது குறைத்துச் சாப்பிடுங்கள் என்பார்.
ஆனால் நிம்மதியாய் எங்கள் குடிமனைக்குள் விரும்பியதைச் சாப்பிட்டு நிம்மதியாய் தூங்கிகொண்டிருந்தோம் பாருங்கள், பெய்ந்தது பெய்ந்தது மூன்று நாள் மழை வந்தது மூன்று அடிக்குமேல் என் களிமண் குடிசைக்குள் ஆற்றுக்குள் கிடந்த நீர், யார் இதை நிறுத்துவது? மாற்றுவழிதான் ஏதும் உண்டா? என்று சிந்தித்து செயற்படுவார்களா? பொறுத்திருந்து தான் பார்ப்போம்!.
சரி வீட்டிற்குள் வெள்ளம் போகின்றோம் அகதியாய் பாடசாலைக்குள். யுத்த காலத்தில் இருந்து இன்று வரை அகதிகள் ஆனோம் நாம். பாடசாலையில் சமைக்கப்படுகின்றது அங்கு கொடுக்கப்படும் உணவு சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், மேலே வைத்தியர் இந்த இந்த சாப்பாட்டை சாப்பிடவேண்டாம் என்பவர்களுக்கு வேறுபாடு இன்றி அனைவருக்கும் கொடுக்கப்படுகின்றது. தொடரும் நிம்மதியின் அவலக்குரல் சில துளிகள்……………………. மீண்டும்.












