ஜோன் கீல்ஸ் நிறுவனத்தினால் நிவாரண உதவி


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட செங்கலடி பிரதேசத்தில் உள்ள சில கிராமங்களின் மக்களுக்கு ஜோன் கீல்ஸ் நிறுவனத்தினால் நிவாரணங்கள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.


இதில் தளவாய்,களுவங்கேணி, செங்கலடி, வந்தாறுமூலை, ஏறாவூர் மற்றும் சவுக்கடி போன்ற கிராமங்களில் 780 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பாலித பெர்னாண்டோ, கிழக்கு வலய முகாமையாளர் எம்.ஜெகவண்ணன் மற்றும்  ஜோன்கீல்ஸ், எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தினர், எம்.ரி.வி நிறுவனத்தினர், யூனியன் அஷ்சுரன் நிறுவனத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.