சித்தாண்டியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகல்வதை உடன் நிறுத்தக்கோரி உண்ணாவிரதம்

(சித்தாண்டி நித்தி)  சட்ட விரோத மணல் அகழ்வு மற்றும் சுற்றுப்புறசூழல் தரிசி நிலமாதலை தடுத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சித்தாண்டி 3 கிராம சேவகர் பிரிவிலுள்ள சந்தண மடு ஆற்றில் கடந்த 5 வருடங்களாக ஒரு சில அரசியல் வாதிகள், என தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு இயங்குபவர்கள் பகல் வேளையில் சட்டரீதியாக பணிக்கப்பட்ட முறைகளைத்தாண்டி எண்ணிக்கைக்கு மாறாக பெரிய கனரக வகனங்கள் மற்றும் அகழ்வு இயந்திரங்களை பயன்படுத்தி கடந்த கால ஆட்சியில் அனுமதிப்பத்திரம் இன்றியும் இரவு வேளைகளிலும் இலக்கத்தகடு இன்றி மண் அகழ்வினை மேற்கொண்டதுடன் தொடர்ந்து நடத்திச் செல்கின்றனர்.  என உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர் . இது பற்றி மேலும் அவர்கள் தெரிவிக்கையில் 


 இச்செயற்பாடு தொடர்பாக பலமுறை பல மேல் அதிகாரிகளிடமும் ஆதாரங்களுடன் சமர்பித்தும். 

எந்தவித நடவடிகையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை இது எமது மக்களுக்கு கடும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன் 
இதனால் எமது கிராமத்தில் பலவிதமான சுற்றாடல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

 குறிப்பாக பிரதேச செயலாளர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் ஒதுக்கப்படும் இடங்களை விட்டு வியாபார, குறுகிய நோக்கில் குறித்த ஆற்று மணல் அகழ்வதனால் ஆற்றில் இருமருங்கிலுமுள்ள சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளதுடன்,  சுமார் 1000 ஏக்கர் வரையான காணிகள் மறைமுக தாக்கத்திற்கும் உள்ளாகின்றது.

 அத்துடன் சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, முறக்கொட்டான்சேனை போன்ற கிராமங்கள் குறித்த ஆற்றுப் பாதை அனுமதியளிக்கப்பட்ட இடத்தை விட்டு சட்டவிரோதகமாக மக்கள் பயன்படுத்தும் பாதைகளிலும் குறித்த செயற்பாடு இடம்பெறுகின்றது ஆற்று  நீர் பெருக்கெடுத்து வெள்ளமாக பெருக்கெடுப்பதனால்  மழைகாலங்களில் கடுமையான வெள்ள பாதிப்பினை எமது ஊர் எதிர் நோக்குவது யாவரும் அறிந்த உண்மையாகும். அதுமட்டுமன்றி அரியவகை வனவளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை பெரும் மன வேதனையைத் தோற்றிவிக்கின்றது. 

குறிப்பாக பிரப்பை, மதுரை, வெல்லை, விளா மற்றும் சதுர்ப்பு நிலத்தாவரம் போன்ற வனவளங்களும் வேரோடு சரிந்து அழிவடைந்து வருகின்றது.

 இதனைவிட மிகமிக இழிவுகரமான செயற்பாடாக பயிரிடப்பட்டுள்ள வயல்நிலங்களில் தேங்கிக் கிடக்கும் ஆற்று மணல்கள் இரவு வேளைகளில் குவிக்கப்பட்டு வயல்களுக்குள்ளால் இலக்கத்தகடு அற்ற வாகனங்களில் ஏற்றப்பட்டுவதுடன் அவ் உழவு இயந்திரத்தினை செலுத்தும் சாரதிகள் மிகவேகமாக கிராம பாதையில் உழவு இயந்திரத்தினை செலுத்தி செல்வதனால் சிறு குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள மிகவும்; பாதிப்படைகின்றனர் இது மிகவும் அருவருக்கத்தக்க செயலாக காணப்படுகின்றது.   


நல்லாட்சி ஏற்பட்டுள்ள இவ்வாறான நிலை கௌரவ ஜனாதிபதி அவர்களின் நல்லாட்சியில்  மக்களைச் சுரண்டிவாழும் அரசியல் வாதிகள் மற்றும்; அவர்களோடு தொடர்புடைய அடிவருடிகளாகச் செயற்படும் ஒரு சிலரின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் என எதிர்பார்த்து வாக்களித்த  எங்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமாகவே உள்ளது.

 அதாவது பிரதேச செயலாளர் மற்றும் ஏனையோரின் அனுமதி இல்லாது தொடந்து இரவு வேளையில் இலக்கத் தகடுகள் அற்ற வாகனங்களில் தொடரும் குறித்த செயற்பாட்டைப் பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது. 

நல்லாட்சியில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அப்பிரதேசத்தில் இயங்கிவரும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களிடமும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் மிக இரகசியமாக (தெரிய வருமென்றால் உயிருடன் வாழ முடியாத பயங்கரம் காணப்படுகின்றமையால்) குறித்த உண்மையினை அறிந்து உடனடியாக எமது சித்தாண்டி சந்தண மடு ஆற்றின் மணல் அகழ்வினை நிறுத்தி எமது கிராமத்து மக்களையும்  பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மிக அன்பாக வேண்டுகின்றோம். 

இச்செயற்பாட்டிற்கு தீர்வு கிடைக்கப்பெறாத பட்சத்தில் சந்தணமடு ஆறு 4 கிலோ மீற்றர் தாண்டிவந்து சித்தாண்டி கிராமத்தின் மத்தியால் செல்லும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 எனவே இத்தகைய இழிவான வழியில் இவர்கள் மண் அகழ்வதினை முற்றாக நிறுத்தவேண்டும் இவ் மண் அகழ்வினால் பாரம்பரியமாக எங்களது மூதாதயினர் கடடி காத்து வந்த எமது ஊரினையும் அதன் பாரமபரியங்களையும் கட்டி காக்க முடியாமல் போவதுடன் எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்விடமும் கேள்விக்குறியாகியுள்ளமை இத்தகய மிலோட்சதனமாக மண் அகழ்வினை மேற்கொள்ளும் அருவருடிகளுக்கு ஏன் புரியவில்லை.

 எனவே இத்தகய செயற்பாட்டினை உடன் நிறுத்தவேண்டும் இல்லையேன் நிறுத்தும் வரை நாம் இறந்தலும் போராட்டத்தை கைவிடமாட்டோம்.  என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர் .