கிழக்குப் பல்கலைக்கழக 2013/2014ம் கல்வியாண்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 1ம் வருட சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட (மருத்துவம் மற்றும் தாதியியல்) மாணவர்களுக்கான விரிவுரைகள் 19.01.2015ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மேற்படி பீடத்தைச் சார்ந்த மாணவர்கள் 18.01.2015 அன்று காலை 8.00 மணி தொடக்கம் இல:50 புதிய வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியிலுள்ள அலுவலகத்திற்கு சமுகமளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்:
உதவிப் பதிவாளர்/மாணவர் நலன்புரிச்சேவைகள் : 065-2240731
பீடாதிபதி/ சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் :065-2227286
ஏனைய பீடங்களைச் சார்ந்த முதலாம் வருட புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர்
அறிவிக்கப்படும்.
பதிவாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம்
வந்தாறுமூலை.












