மைத்திரி முன்னிலையில்- மட்டக்களப்பிலும் அமோக வெற்றி!

கடைசியாக(09.01.2015) காலை 5.15 மணிக்கு வெளியாகியுள்ள உத்தியோகவூர்வ முடிவுகளின் படி மைத்திரிபால சிறிசேன 858,849(52வீதம்) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார் .
மகிந்தராஜபக்ச 746,092(45வீதம்) இதன் அடிப்படையில் 112,757 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னனியில் உள்ளதாக தெரியவந்துள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் சாதாரண கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக வாக்களிப்பு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 63.45 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 67.09வீதம் வாக்கு பதிவு இடம்பெற்றதுள்ளதுடன் கல்குடா தொகுதியில் பட்டிருப்பு தொகுதியில் 58.05வீதம் வாக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் முதலாவது முடிவு வெளியாகியுள்ளது. 

இரத்தினபுரி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 11864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9053 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


கேகாலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 14976 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 14163 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


காலி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 42956 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 37095 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


பொலனறுவை மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 9480 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4309 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


மொனராகலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ  8281 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 7513 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


மாத்தளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ  8483 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 8394 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


மாத்தறை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ  13270 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 10382 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


அம்பாந்தோட்டை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ  10295 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 5620 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


பதுளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ  13115 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 13031 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



யாழ் மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 10885 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4607 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



மட்டக்களப்பு மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 6816 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 1605 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



திகமடுல்ல  மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 11917 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 9713 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



கம்பஹா மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 20386 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 20296 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 4864 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4721 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.