பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலய கும்பாபிஷேக மலரான “முத்து விநாயகர் வித்தகம்” நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ். காந்தன் குருக்கள் எழுதிய இந்நூலின் வெளியீட்டுரையை ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன், நூல் நயவுரையை பழுகாமம் மகா வித்தியாலய அதிபர் க. பிரபாகரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணண், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி த.கருணாகரன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கா. தட்சணாமூர்த்தி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பிரதிகளைப் பெற்றனர்.
நூலாசிரியருக்கு கொக்கட்டிச்சோலை தான்தோன்ற_ஸ்வரர்; ஆலய பிரதம குரு மு.கு. சச்சிதானந்தக்குருக்கள் வாழ்த்துப் பத்திரம் வழங்கிக் கௌரவித்தார்.












