(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு முதலமைச்சர் விடயம் ஒரு பேசுபொருளல்ல. அவ்விடயத்தில் விட்டக்கொடுப்புக்கு இடமேயில்லை.ஆளும் மத்திய அரசாங்கம் தார்மீகஅடிப்படையிலியங்கி கிழக்கில் நல்லாட்சிக்கான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும்.நாம் எந்தவொரு இனத்திற்கும் பாதிப்பேற்படாதவகையில் ஆட்சிநடாத்துவோம்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் த.தே.கூட்டமைப்பிற்கும் மு.கா.விற்கும் இழுபறி நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றனவே இது பற்றித் தங்களின் கருத்து என்ன என்றுகேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறிப்பிட்டார்.
இணைந்த வடகிழக்கு மாகாணசபையிலும் கிழக்கு மாகாணசபையிலும் மூன்று தடவைகள் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவான துரைரட்ணம் 35வருடகால அரசியல் அனுபவம் கொண்டவர். அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் பிறந்து; மட்டக்களப்பில் வதியும் அவர் திருமலைமாவட்டத்திலும் பல காலம் இயங்கியவர் என்ற அடிப்படையில் மூன்று மாவட்டங்களையும் நன்கு அறிந்தவராவார்.
கடந்த மாகாணசபைத்தேர்தலில் த.தே.கூட்டமைப்பில்அதிகூடிய வாக்குகளைப்பெற்றிருந்தும் எதிர்கட்சித்தலைவர் பதவியை பெருமனதோடு விட்டுக்கொடுத்த அரசியல்முதிர்ச்சி கொண்டவர்.புதிய சபையில் அமைச்சர் பதவிக்காக இவரது பெயர் கட்சிஉயர்பீடத்தில் சிபார்சு செய்ய்பட்டிருக்கின்றது.
அவர் மேலும் தெரிவிக்கையில் :
நாம் மத்திய அரசாங்கத்தில் அமைச்சு பதவியையோ வேறெந்த பதவியையோ கேட்கவில்லை.ஆனால் கிழக்கு மாகாணசபையில் குறைந்தபட்சம் எமக்குரிய முதலமைச்சர் பதவி ஒரு அமைச்சர் பதவி ஒரு சபாநாயகர் பதவி என்பவற்றைத் தந்தேயாகவேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.விட்டுக்கொடுப்புக்குமிடமில்லை.இதற்கு நியாயமான காரணங்களுண்டு.
கிழக்கில் தமிழ்மக்கள் 40வீதமும் முஸ்லிம்மக்கள் 37வீதமும் சிங்களமக்கள் 23வீதமும் உள்ளனர். கடந்தகாலங்களில் நாம் விட்டுக்கொடுத்ததன் காரணமாக நடைமுறையிலிருந்த மாகாணசபை கிழக்குவாழ் தமிழ்சமுகத்தை முற்றாகவே புறக்கணித்தது. தமிழ்மக்கள் பலவகையிலும் பாதிக்கப்பட்டார்கள்.தமிழ்பபிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டன.
மாகாணசபை அமைச்சரவையிலும் 4முஸ்லிம் அமைச்சர்கள் 1 சிங்கள அமைச்சர் நியமிக்கப்பட்டமை முதல் தொழிலாளர் நியமனம் சிரேஸ்ட அதிகாரிகள் நியமனம் மற்றும் உயரதிகாரிகள் நியமனவிடயத்திலும் இடமாற்றங்கள் வரை தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டார்கள்.
இதற்குநியாயமான போதிய ஆதாரங்களுள்ளன. உதாரணமாக 10கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் தொடர்ந்து 3 வருடமும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க்கிராமம்கூட தெரிவாகவில்லை. எத்தனையோ தடவைகள் சொல்லிப்பார்த்தும் பலனில்லை. இதைவிட அப்பட்டமான வெளிப்படையான புறக்கணிப்பு ஏதாவது தேவையா?
ஆனால் நாம் மாகாணசபையைப்பொறுப்பெடுத்தால் எந்தகொரு இனத்திற்கும் பாதிப்பேற்படாதவகையில் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். ஏனெனில் நாம் ஏலவே பாதிக்கப்பட்டவர்கள். எனவே இன்னுமொரு இனத்தை பாதிக்கும்வகையில் ஒருபோதும் செயற்படமாட்டோம்.
இலங்கை மத்திய அரசாங்கத்தின் அதிகாரப்பரவலாக்கல் குழுவிலும் ஜனாதிபதியின் அதிகாரககுழுவிலும் நாம் அங்கம் வகிக்கின்றோம்.எனவே ஆளும் தரப்பு நல்லிணக்க அம்சத்தில் முதலமைச்சர் விடயத்தைக்கையாண்டு கிழக்கில்நல்லாட்சிநடக்க ஒத்துழைக்கவேண்டும்.
என்று கூறினார்.