இதன்படி 150 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் 33 ரூபாய் குறைவடைந்து 117 ரூபாவாகவும் 158 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோல் 30 ரூபாய் குறைவடைந்து 128 ரூபாவாகவும் விற்பனையாகவுள்ளது.
அத்துடன் 133 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 23 ரூபாய் குறைவடைந்து 110 ரூபாவாகவும் 111 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் டீசல் 16 ரூபாய் குறைவடைந்து 95 ரூபாவாகவும் விற்பனையாகவுள்ளது.
இதேவேளை 81 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 16 ரூபாய் குறைவடைந்து 65 ரூபாவாக விற்பனையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













