கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருத நகரை சேர்ந்த ஜெயகாந்தன் ஜெயரட்ணம் (வயது 21) என்பவர் பேத்தாளை மீன் சந்தையில் இன்று காலை பத்து மணியளவில் ஏழு பேர் கொண்ட ஒரு அரசியல் குழுவினரால் கடத்தப்பட்டு, கைகளில் வெட்டப்பட்ட நிலையில் மாலை 5 மணியளவில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு அரசியல் பழிவாங்கலே காரணம் என நம்பப்படுகிறது. இது குறித்து மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.