கடந்த ஆட்சியாளர்கள் முழு நாட்டு மக்களையும் முட்டாள்களாக்கியிருந்தார்கள். நாட்டில் சட்டமும் நீதியும் சீர்குலைந்திருந்த வேளையிலேயே மக்கள் மாற்றம் வேண்டி வாக்களித்தார்கள் இவ்வாறு சர்வோதய இயக்கத் தலைவர் கலாநிதி ஆரியரத்ன தெரிவித்தார்.
சர்வோதய இயக்கின் தேசோதய மாகாண மட்ட அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் மாவட்ட பயிற்சி நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 18.01.2015 சர்வோத நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம் தலைமையில் இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து தேசோதய இயக்கத்தின் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவரான கலாநிதி ஆரியரத்ன தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி ஆரியரத்ன
இறைமை, ஜனநாயக உரிமைகள், மதம், இனம், மொழி என்பன கடந்த ஆட்சியாளர்களால் கவனத்தில் எடுத்து அவற்றுக்கு மதிப்பளிக்கப்படவில்லை.
எந்தவொருவிடயத்துக்கும் நாம் அரசியலைக் காவிக் கொண்டு அரசியல் வாதிகளின் சிபார்சுகளைக் காவிக் கொண்டு செல்ல வேண்டியயிருந்தது.
பாடசாலைக்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதாயின் அரசியல் வாதிகளின் சிபாரசு இல்லாமல் நாம் தனித்துவத்துவத்துடன் சென்று அலுவல்களை முடிக்கும் கலாசாரம் உருவாக்கப்படவேண்டும். ஒ;வவொரு அலுவலகத்திலும் நாட்டின் சாதாரண ஒரு குடிமகனுக்கும் கௌரவமளித்து அவனது தேவை பூர்த்தி செய்யப்படவேண்டும்.
சட்டமும் நீதியும் எங்களைப் பாதுகாப்பது போல அதற்கு நாமும் கௌரவமளிக்க வேண்டும்.
சட்டத்தையும் நீதியையும் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இந்த நாட்டில் மக்களைக் கொல்பவர்களுக்கும் சட்டத்தையும் நீதியையும் சீர்குலைத்தவர்களுக்கும் அமைச்சுப் பதவி கொடுப்பதாக இருந்தால் அது ஒரு அராஜகம் ஆட்சி செய்வதைத்தான் வெளிப்படுத்தும்.
தகவல் பெறும் உரிமை நாட்டு மக்களுக்கு இருக்க வேண்டும்.
கடந்த கால ஆட்சியில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் ஹாமதுருவும் சேர்ந்து ஒரு பெண்ணைத் தாக்கிக் கொண்டிருந்த காட்சியை நான் ஒருநாள் என் கண்ணால் கண்டேன்.
அப்படிப்பட்ட, தனிப்பட்ட நபர்கள் சட்டத்தையும் நீதியையும் தமது கையில் எடுக்கும் அராஜக ஆட்சி எமக்குத் தேவையில்லை.
இலங்கையின் சரித்திரத்தில் வடக்கு கிழக்கு தெற்கு மக்கள், எதுவித வேறுபாடுகளுமின்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கருதித்தான் வாக்களித்தார்கள். அது மஹிந்தவுக்கு எதிராகவோ அல்லது மைத்திரிக்கு ஆதரவாகவோ மக்கள் வாக்களிக்வில்லை.
கடந்த 60 வருடகாலமாக சர்வோதய இயக்கம் இன ஐக்கியத்திற்கும் நல்லாட்சிக்குமாகவே பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
நாமெல்லோரும் இலங்கையர்கள் என்ற அடிப்டையில் அவரவர் விரும்பிய மதத்தை தமது கலாசாரத்தை அவர்களுக்கு விரும்பிய உணவை அவர்கள் விரும்பிய மொழியைப் பேசிக் கொண்டு வாழலாம்.
இதில் யாரும் முரண்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை.
சர்வோதய இயக்கம் மக்களாட்சி, நல்லாட்சிக்காகப் பாடுபடுகின்றது. சண்டியர்களின் ஆட்சி இலங்கை மக்களுக்கு ஒருபோதும் தேவைப்படாது.
பல்லின, பல் கலாசார பண்பாட்டு விழுமியங்களோடு வாழ்கின்ற நமக்கு சண்டித்தன அரசியலும் தெருச்சண்டியர்களின் கடும்போக்கு மதவாதமும் சரிப்பட்டு வராது.
நாட்டில் நல்லாட்சியைக் கொண்டு வருவதற்காக தேசோதய இயக்கம் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும்
கறைபடியாத அரசியல் வாதிகளை உருவாக்கி நாட்டில் நல்லாட்சியைக் கொண்டு வருவதற்காக தேசோதய இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கரிசனை உள்ளது.
தற்போதைய ஆட்சியிலும் நாட்டு மக்கள் நல்லாட்சியை அனுபவிக்கவில்லையாயின் தேசோதயம் எனும் எதிர்கால அரசியல் கட்சி மக்களுக்கு சிறப்பான நல்லாட்சியைக் கொண்டு வருவதற்காக களத்தில் இறங்கும் என்றார்.
இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தேசோதய தொண்டர்கள் சுமார் ஐந்நூறிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சர்வோதய இயக்கத்தின் உபதலைவர் டி.ஏ. பெரேரா, திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் வி. ஜவராஜ், வடக்க கிழக்கு மாகாண சபையின் முன்னாள் செயலாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, திருகோணமலை தேசோதய இயக்கத்தின் தலைவர் டபிள்யூ கொத்தலாவல உட்பட இன்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.












