சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி பேராலயத்தில் இடம்பெற்ற திருவெம்பாவை நிகழ்வுகள்

(நித்தி) சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி பேராலயத்தில் திருவெம்பாவை விரதமானது கடந்த 2014.12.27ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி நேற்று வெள்ளிக்கிழமை இரவு பூசையுடன் (2015.01.02) எட்டாம் நாள் விரதம் நிறைவடைந்துள்ளது. 

 எட்டாம் நாள் விரத பூசையில் விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன், திருவெம்பாவை பாடல் என்பன ஆலயத்திற்கு வருகைதந்த இளஞ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளால் பாடப்பட்டன.

எட்டாம் நாள் விரத பூசையினை எம்.சோதிலிங்கம் குடும்பத்தினர் நடாத்திமுடித்தனர். 

வருடாந்தம் நடைபெறும் திருபம்பாவை விரதங்களுக்கு சித்தாண்டி இளஞ்சைவ மாணவர் மன்றம் அணுசரனை வழங்கி வருகின்றது.  

திருபம்பாவை ஒன்பதாம் நிகழ்வில் (04.01.2015) திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நடைபெறவுள்ளது.   

எதிர்வரும் திங்கள் கிழமை (05.01.2015) திருபம்பாவை விரத்தின் இறுதி நாள் என்பது குறிப்படத்தக்கது.