(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவில் உப அஞ்சல் அலுவலகம் இன்று திங்கள்கிழமை(26)திறந்துவைக்கப்பட்டது.
இவ் உப அஞ்சல் அலுவலகம் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் எஸ்.விவேகானந்தலிங்கம் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது பிரதேச அஞ்சல் அதிபர் எஸ்.ஜெகன், மாகாண அஞ்சல் காரியாலய பிரதம லிகிதர் ஏ.சுகுமார், உப அஞ்சல் அதிபர் எம்.நிர்மலா மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் போன்றோர் கலந்துகொண்டனர்.
கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப் பகுதியில் மிக நீண்ட காலமாக இருந்துவந்த அஞ்சல் அலுவலக சேவையின் குறைபாடு இவ் உப அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டதன் மூலம் நீங்கியுள்ளது.












