சொட்டோகான் கராத்தே டூ பெடரேசன் ஸ்ரீலங்கா 8வது தேசிய கராத்தே சம்பியன் போட்டி - 2015

சொட்டோகான் கராத்தே டூ பெடரேசன் ஸ்ரீலங்கா இனால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண JKMO இன் சார்பாக  பங்குபற்றிய 31 போட்டியாளர்கள் 41 பதக்கங்களைப் பெற்றனர்.

14-02-2015 சுகததாச உள் அரங்கில் நடைபெற்ற மேற்படி போட்டியில் பங்குபற்றிய அம்பாரை JKMO அணியினர் 12 பதக்கங்களையும் கல்முனை JKMO அணியினர் 19 பதக்கங்களையும் மட்டக்களப்பு JKMO அணியினர் 10 பதக்கங்களையும் பெற்றனர்.


கிழக்கு மாகாண அணியினர் பெற்ற 41 பதக்கங்களில் 16 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலாக சிறந்த கறுப்புப்பட்டி வீரராக தெரிவு செய்யப்பட்ட S. பால்ராஜ் அவர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன்  பண பரிசும் வழங்கப்பட்டது.

போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களை JKMO இன் சிரேஸ்ட போதனாசிரியர்களான சென்சி மு. கேந்திரமூர்த்தி, சென்சி மு. ரவிச்சந்திரன், சென்சி S. முருகேந்திரன், சென்சி M.B ஜயினுலாப்தீன், சென்சி மு. குககுமாரராஜா ஆகியோர் பயிற்றுவித்து வழிகாட்டியமை குறிப்பிடத்தக்கது.