(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு சித்தாண்டியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பிரதேச மக்களினால் இன்று திங்கள் கிழமை (09) காலை சுமார் 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
சித்தாண்டி சந்தணமடு ஆற்றில் பிரதேசத்தில் இரவுவேளை வேளாண்மை காவல் குடிசையில் காவலுக்கு இருந்த இளைஞன் ஒருவரை இனந்ததெரியாத நபர்கள் தாக்கியமை கண்டித்தும், தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்துமாறுகோரியும், சட்டவிரோதமாக சந்தணமடு ஆற்றில் மண் அகழ்வை முற்றுமுழுதாக தடுக்ககோரியும் இவ் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்வம் தொடர்பாக தெரியவருவதாது;
சித்தாண்டி– 1 வசிக்கும் முத்துப்பிள்ளை முரளிதரன் என்பர் தனது வயலில் யானைக் காவலுக்காக இருந்தபோது சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடும் சில சந்தேக நபர்கள் குறித்த நபரை தாக்கியதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
இதேவேளை மேற்படி பாதிக்கப்பட்ட நபரே கடந்த 27.01.2015 செவ்வாக்கிழை மற்றும் மற்றும் 05.02.2015 திங்கள் கிழமை ஆகிய நாட்களில் சட்டவிரேத மண் அகழ்வில் ஈடுபடுவர்களுக்கு எதிராக மண் அகழ்வினை தடுக்ககோரி உண்ணா விரதம் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் ஊடாகவும் முன்னின்று தலைமைத்துவம் வகித்து மக்களை வழி நடத்தியிருந்தார்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத தீய சக்திகளே குறித்த நபரை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக பாதிப்புக்குள்ளான குறித்த நபர் வெளியில் சத்தம் கேட்காத வகையில் அவரின் வாயினை துணியினால் கட்டியும் கூரிய ஆயுதங்களினால் தலையில் பலமாகதாக்கி உயிருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை பொலிசார் உடனடியாக கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கமாறும், சட்டவிரோத மண் அகழ்வை முற்றுமுழுதாக நிறுத்தக்கோரியும் இன்று சித்தாண்டி சித்திரவேலாயுத பேராலயத்திற்கு முன்னாலுள்ள பிரதான வீதியில் இவ் கவனயீர்;ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்துகொண்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை முன்னெடுக்கும்படி குறித்த இடத்திற்கு பிரச்சன்மாயிருந்த ஏறாவூர் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியேச்சகர் இக்வலயிடம் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உதவிப் பொலிஸ் அத்தியேச்சகர் கருத்து தெரிவிக்கையில் பாதிப்புக்குள்ளான நபரிடமிருந்து சம்பவம் தொடர்பான விபரங்களை கேட்டறிந்த பின்பு இச்சம்வபத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்தார்.
குறித்த சம்பவத்துக்கு பொலிசார் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் மக்களோடு மக்களாக பங்குபற்றி உரிய தீர்வு கிடைக்கும் வரைக்கும் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பாராளுமன்றம் வரைக்கும் குறித்த விடயத்தினை முன்னெடுத்துச் செல்வதாக மக்களிடம் தெரிவித்தார்.












