மட்டக்களப்பு கல்லடிக் கடலில் நீண்ட நாட்களின் பின்பு கரைவலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நெத்தலி மீன்கள்; பிடிபட்டதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக கடலில் மீன்கள் பிடிபடாத நிலையில் கடலுணவுகளுக்கு மட்டக்களப்பில் பெரும் கிராக்கி காணப்பட்ட நிலையில் ஆள்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
பாரை, சுறா, வளையா போன்ற ஆள்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் கிலோ ரூபாய் 800 முதல் 1200 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்ட நெத்தலி மீன்களை கிலோ ரூபாய் 300 ரூபாபாவிற்கு விற்பனை செய்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13,125 கடற்றொழிலாளர்கள் தங்களது ஜவனோபாயத்திற்கு கடற்றொழிலை நம்பி வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.












